search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி. கேமரா"

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டுவதற்கு வெளியூரிலிருந்து வந்த கொள்ளை கும்பல் கை வரிசை காட்டி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா (வயது 50).

    இவர், சம்பவத்தன்று ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். நகை பறிப்பு குறித்து கீதா போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் கணபதிபுரம் ஸ்ரீகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் சிவதாணு (74). இவர், தனது மனைவி பாப்பாவுடன் முப்பந்தல் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்று இருந்தார். அப்போது சிவதாணு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டனர்.

    திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இது குறித்து சிவதாணு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அடுத்தடுத்து ஒரே நாளில் 2 பேரிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 நகை பறிப்பு சம்பவத்திலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கைவரிசை காட்டுவ தற்கு வெளியூரி லிருந்து வந்த கொள்ளை கும்பல் கை வரிசை காட்டி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×